உலக சம்பியன் பட்டத்தை வென்ற தமிழருக்கு புதிய அமைச்சர் கொடுத்த பரிசு! -
உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழருக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ நிதியுதவி வழங்கியுள்ளார்.
உலக ஆணழகர் லூசியன் புஷ்பராஜுக்கு தனது சொந்த நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக அமைச்சர் வழங்கியுள்ளார்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சஜித் பிரேமதாஸா, தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். இதன்போது இந்த அன்பளிப்பை வழங்கி வைத்துள்ளார். அண்மையில் தாய்லாந்தில் உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உலக சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதன்போது , 100 கிலோகிராம் எடைக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் பங்கேற்ற லூசியன் புஷ்பராஜ் உலக கட்டழகராக தெரிவாகி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக ஆணழகர் லூசியன் புஷ்பராஜுக்கு தனது சொந்த நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக அமைச்சர் வழங்கியுள்ளார்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சஜித் பிரேமதாஸா, தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். இதன்போது இந்த அன்பளிப்பை வழங்கி வைத்துள்ளார். அண்மையில் தாய்லாந்தில் உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உலக சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதன்போது , 100 கிலோகிராம் எடைக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் பங்கேற்ற லூசியன் புஷ்பராஜ் உலக கட்டழகராக தெரிவாகி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக சம்பியன் பட்டத்தை வென்ற தமிழருக்கு புதிய அமைச்சர் கொடுத்த பரிசு! -
Reviewed by Author
on
December 21, 2018
Rating:

No comments:
Post a Comment