மன்னார் நகர சபையின் 11வது அமர்வில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வு-படம்
பிறந்துள்ள புது ஆண்டிலே சிறப்பான அபிவிருத்திகலோடு சிறந்த சேவைகளை முன்னெடுக்க உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் எதிர் பார்க்கின்றேன் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் 11 ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை (21) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் 'சபா' மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது தலைமை உரை ஆற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,
எமது மன்னார் நகரத்தை அபிவிருத்திகளுடன் கூடிய வளமான அழகான நகரமாக மாற்றுவததே எமது நோக்கம்.
அந்த நோக்கத்திற்கு சபை உறுப்பினர்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை.என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மன்னார் நகரசபை பிரிவுக்குற்பட்ட பல்வேறு திட்டங்கள் தொட்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக வீதி,கழிவு அகற்றல்,வடிகான் புனரமைப்பு,குளம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் மக்களினால் முன் வைக்கப்பட்ட மன்னார் மது விற்பனை நிலையம் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் மன் வைக்கப்பட்டது.
குறிப்பாக குறித்த மது விற்பனை நிலையத்தில் தரமற்ற மதுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை, மது விற்பனை நிலையத்திற்கு முன் மது அறுந்துவதாகவும் இதனால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படவதாகவும்,முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் நிபந்தனைகளுக்கு அமைய குறித்த மது விற்பனை நிலை செயற்பாடுகள் அமைய வேண்டும் எனவும் அல்லது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மன்னார் நகர சபையில் பதிவு செய்யப்பட்ட முன் பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாய் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
January 22, 2019
Rating:
No comments:
Post a Comment