பாரிஸில் 130 பேர் கொல்லப்பட காரணமான முக்கிய நபர் கைது!
பாரிஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் 130 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
பாரிஸ் மட்டுமின்றி அதன் புறநகர் பகுதியிலும் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்ட்டிருந்தது.
இந்த தாக்குதல் பெல்ஜியத்தில் வைத்து திட்டமிடப்பட்டிருந்ததும், பெல்ஜிய பயங்கரவாதிகளே தாக்குதல் நடத்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதில் முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல்சலாம் பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தான்.

இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் தற்போது பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை டிசம்பர் மாத இறுதியில் கைது செய்யபப்ட்டிருந்ததாக இன்று புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய நபர் தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியவர் என பெல்ஜிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது என மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ள குறித்த நபர், பயங்கரவாதிகளுக்கு குடியிருப்பு வசதி ஏற்பாடு செய்து வழங்கிய முகம்மது பக்கலி என்பவரை தொடர்பு கொண்டு ஆயுதம் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பக்கலி சம்பவம் நடந்த சில நாட்களில் பெல்ஜியத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்காக பிரான்ஸ் அழைத்துவரப்பட்டார்.
பாரிஸ் தாக்குதலை பொறுத்தமட்டில் மூன்று பயங்கரவாத குழுக்கள் துல்லியமான திட்டங்களுடன் செயல்பட்டுள்ளனர்.
இந்த குழுக்களில் சிலர் சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள். இவர்கள் அகதிகள் என்ற போர்வையில் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸில் 130 பேர் கொல்லப்பட காரணமான முக்கிய நபர் கைது!
Reviewed by Author
on
January 10, 2019
Rating:
No comments:
Post a Comment