370 உயிர்களை பலி வாங்கிய கொடிய வைரஸ்! -
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த ஜூலை மாதம் எபோலா என்ற வைரஸின் தாக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிப்புக்குள்ளான நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் எபோலாவின் தாக்கம் பரவியுள்ளது. இதுதொடர்பாக காங்கோ சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், ‘காங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தற்போது 360ஐ தாண்டியது.

எபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 685 பேரில் 636 பேருக்கு நோய் தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட 245 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.
மேலும், எபோலா வைரஸுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கினி, லைபீரியா, சியாரா லியோன் உட்பட 8 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் பாதிக்கப்பட்ட 15,145 பேரில் 5,420 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

370 உயிர்களை பலி வாங்கிய கொடிய வைரஸ்! -
Reviewed by Author
on
January 22, 2019
Rating:
No comments:
Post a Comment