த.தே.கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் -
மட்டக்களப்பு பாலர்சேனை காலாசூரி விநாயகமூர்த்தி வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் பாடசாலை அதிபர் தலைமையில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசியத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும்.
இலங்கையில் இருக்கின்ற சில தமிழ் தலைமைகள் நல்லிணக்கம் பேசி கொண்டு காலத்தை கழிக்கின்றார்கள்.
ஆனால் மற்றைய சமூக அரசியல்வாதிகள் நல்லிணக்கம் என்ற போர்வையிலே கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கான வேலைகளை நாசுக்காக செய்துகொண்டிருக்கின்றனர்.
எங்களுடைய தலையிலே மற்றவர் மிளகாய் அரைக்கும் செயற்பாடுதான் கிழக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று கிழக்கு தமிழ் தலைமைகளுக்கு மற்றைய சமூக அரசியல்வாதிகள் நற்சான்றிதழ் கொடுக்கின்றார்கள் என்பதை பார்க்கும் போது எந்த அளவிற்கு அவர்களின் செயற்பாடுகள் செல்கிறது என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே நாளுக்கு நாள் தமிழர்களின் இருப்பும் வளமும் தினம் தினம் சூரையாடப்பட்டு கொண்டு செல்கிறது. ஒரு வாரத்திற்கு கிழக்கு மாகாணத்திலிருந்து 18 பேர் தமிழர்கள் இனமாற்றப்படுகின்றார்கள்.
115 சதுரக்கிலோமீற்றர் அளவான நிலப்பரப்பு 2009ஆம் ஆண்டிற்கு பின் மட்டக்களப்பு மாவட்டத்திலே பல கோணங்களில் அபகரிக்கப்படுகிறது.
இங்கு எமது மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு சிலர் பிச்சை சம்பளம் கொடுக்கின்றனர். 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீதி, மற்றும் 2 இலட்சம் ரூபாவிற்கு கிரவல் வீதி போன்றவற்றை கொடுத்து சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கின்ற செயற்பாடு இடம்பெறுகிறது.
நாம் எதிர்கட்சியில் இருந்துகொண்டு ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும் அரசாங்கத்தை வாழ வைப்பதற்காக கைகளை உயர்த்தினோம்.
அதுமட்டுமல்லாது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தபோதும் கைகளை உயர்த்தினோம் முதல் தடவை நானும் உயர்த்தினேன். இரண்டாவது தடவை உயர்த்தவில்லை.
இன்று கிழக்கில் என்ன நடந்துள்ளது ஒன்றுமேயில்லை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வா அந்த தீர்வும் இன்று எமக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது.
செல்வம் அடைக்கலநாதனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினுள்ளிருக்கின்ற தமிழீழ விடுதலை இயக்கம் - டெலோ ஒரு ஊடக அறிக்கையை விட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர்கள் கூறியிருக்கின்றர் இந்த அரசியல் பின்னணியில் இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக நிபுணர்குழு அறிக்கையை கவனமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பார்க்கையில் அதனை நிராகரிப்பதைத் தவிர வேறுதெரிவு எமக்கு இல்லை என்பதை நாம் திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்.
இப்போது நாம் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். திட்டவட்டமாக ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியிருக்கிறனர்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள்ள சில உறுப்பினர்கள் அப்படியில்லை பொறுத்திருங்கள் நாங்கள் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியிலே ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்போம் எனக் கூறியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தென் இலங்கையிலே ஒரு முகத்தை காட்டுகின்றனர், வடக்கு, கிழக்கில் இருக்கின்றவர்களுக்கும் எமது தமிழ் தலைமைகளுக்கும் ஒரு முகத்தைக் காட்டுக்கின்றார்கள். இதையும் ஒருசிலர் நம்பி ஏமாறுவது வேதனைக்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
த.தே.கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் -
Reviewed by Author
on
January 22, 2019
Rating:

No comments:
Post a Comment