அண்மைய செய்திகள்

recent
-

8 வயது தமிழ் சிறுமியின் 14 உலக சாதனைகள் -


திருவெல்வேலி மாவட்டத்தில் கார்த்திக்கேயன் - தேவிபிரியா தம்பதியரின் 8 வயது மகள் பிரிஷாவுக்கு குடியரசு தினவிழா அன்று டாக்டர் பட்டம் வழங்கப்படவிருக்கிறது.

1 வயதில் இருந்தே தன்னுடைய பாட்டி மற்றும் தாயிடம் இருந்து யோகாசனங்களை கற்று வந்துள்ளார். 5 வயதில் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய சர்வதேச அளவிலான யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார். இதுவரை 100க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

கண்டபேருண்டாசனத்தை 1 நிமிடத்தில் 16 முறைகள் விரைவாக செய்து முதல் உலக சாதனையும், லோகஸ்ட் ஸ்கார்ஃபியன் போஸ் யோகாசனத்தை 3.02 நிமிடத்தில் செய்து 2வது உலக சாதனையும், ராஜகபோட்டாசனத்தை 5.13 நிமிடத்தில் செய்து 3வது உலக சாதனையும் புரிந்துள்ளார்.
கடந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் அன்று நீச்சல் குளத்தில் நீச்சலுடன் கூடிய வாமதேவ ஆசனம், ஏக பாத வாமதேவ ஆசனம், பத்மாசனம், குப்தபத்மாசனம், சுப்த பத்மாசனம், நீருக்குள் யோகாசனம் உள்ளிட்ட 8 உலக சாதனையை ஒரே நாளில் நிகழ்த்தினார்.

யோகாசனத்தை தண்ணீருக்கு வெளியே பலர் செய்துள்ள நிலையில், மிகவும் சிறு வயதில் தண்ணீருக்குள் இருந்தபடியே செய்து சாதனை படைத்தார்.
இதற்காக இவருக்கு டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வேலூரில் டாக்டர் பட்டம் பெறுகிறார். தனது மகள் படைத்த சாதனைகளைவிட வேறு பெருமை மற்றும் சந்தோசம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கின்றார் பிரிஷாவின் தாய் தேவி பிரியா.


8 வயது தமிழ் சிறுமியின் 14 உலக சாதனைகள் - Reviewed by Author on January 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.