வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை! பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்
பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள குவம்பர் சஹாதாகோத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி போதன். இவர் ஹைதராபாத் நகரில் எல்.எல்.பி பட்டப்படிப்பை முடித்தார்.பின்னர் கராச்சியில் உள்ள ஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று, தனியார் சட்டசேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமன் குமாரி போதன், தற்போது சிவில் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

பாகிஸ்தான் வரலாற்றிலேயே இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2005-2007 ஆண்டுகளில் ராணா பகவான் தாஸ் என்பவர் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.
இதுகுறித்து சுமன் குமாரி போதனின் தந்தை பவன் குமார் போதன் கூறுகையில், ‘என்னுடைய மகள் சுமன் குமாரி, அவரின் சொந்த மாவட்டத்திலேயே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன்.
உண்மையிலேயே சிறுபான்மை மதத்தில் இருந்து நீதிபதியாகப் பணியாற்றுவது சவாலான பணி. ஆனாலும் எனது மகள் நேர்மையுடன், நீதி தவறாமல் பணியாற்றுவார் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை! பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம் 
 
        Reviewed by Author
        on 
        
January 30, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
January 30, 2019
 
        Rating: 

No comments:
Post a Comment