மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் பலத்த பாதுகாப்புடன் நாளை கொழும்பு கொண்டு செல்லப்படுகின்றது-சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ
மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க நாளை (23) புதன் கிழமை காலை கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
குறித்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை(22) காலை இடம் பெற்றது. 134 ஆவது தடவையாக குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,
குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் நீதவான் மற்றும் விசாரனைக்குழு அதிகாரிகள் இடையில் இடம் பெற்றது.
இந்த நிலையில் நாளை புதன் கிழமை காலை மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புலோரிடவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது வரை குறித்த அகழ்வு பணிகளின் போது 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 294 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை(22) காலை இடம் பெற்றது. 134 ஆவது தடவையாக குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,
குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் நீதவான் மற்றும் விசாரனைக்குழு அதிகாரிகள் இடையில் இடம் பெற்றது.
இந்த நிலையில் நாளை புதன் கிழமை காலை மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புலோரிடவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது வரை குறித்த அகழ்வு பணிகளின் போது 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 294 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் பலத்த பாதுகாப்புடன் நாளை கொழும்பு கொண்டு செல்லப்படுகின்றது-சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ
Reviewed by Author
on
January 22, 2019
Rating:
No comments:
Post a Comment