அண்மைய செய்திகள்

recent
-

சுமந்திரனின் நடவடிக்கையால் சீர்குழையும் தமிழர்களுக்கான தீர்வு


சுமந்திரன் போன்றவர்கள் மேற்கொள்ளும் அவசரமான இந்த நடவடிக்கையால், அரசியலமைப்புச் சட்டம் ஊடாக தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய தீர்வை சீர்குலைக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் விடயத்தில் உதவிகளை வழங்கவே நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைக் குழுவே புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். அரசியலமைப்புச் சபையில் கலந்துரையாடி புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை தயாரித்து, பிரதமர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நிபுணர்கள் குழு தயாரித்த அறிக்கையை நேரடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். அதனையே சுமந்திரன் தற்போது கூறியுள்ளார். இந்த யோசனை கொண்டு வரப்படும் விதம் தொடர்பில் தினேஷ் குணவர்தன உட்பட பலர் எதிர்ப்புகளை முன்வைத்தனர்.

நிபுணர்கள் குழுவிலும் பிளவுப்பட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மூன்று பேர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து தனியாக வரைவு ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.
அதனை ஒதுக்கி தள்ளிவிட்டு, பிரதமரின் அலுவலகத்தில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவர், சுமந்திரன், ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் சம்பந்தப்பட்டு உருவாக்கிய அறிக்கையையே நிபுணர்கள் குழுவின் அறிக்கையாக நாடாளுமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்ய உள்ளனர்.
2016 ஆம் ஆண்டு பிரதமர் முன்னெடுத்த நடைமுறைகளுக்கு முற்றும் முரண்பாடான செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
இதனால், இதற்கு நாங்கள் எமது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேலைத்திட்டம் என்ன என்பதை விளக்கி, நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு ஏற்கனவே யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை யோசனைகள் எதனையும் முன்வைக்கவில்லை. எதனையும் ஏற்றுக்கொள்ளும் இடத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. இது தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே நான் பார்க்கின்றேன்.
சுமந்திரன் போன்றவர்கள் மேற்கொள்ளும் அவசரமான இந்த நடவடிக்கையால், அரசியலமைப்புச் சட்டம் ஊடாக தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய தீர்வை சீர்குலைக்கும்.

இவற்றை பெற்றுக்கொள்ளவே நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுகொடுத்தோம் என்று தமிழ் மக்களுக்கு காண்பிக்க வேண்டிய தேவை சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உள்ளது.
இதன் மூலம் நாங்கள் அனைவரும் எதிர்பார்த்த புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான நடவடிக்கைகள் முற்றாக சீர்குலையும். தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 103 ஆசனங்களே இருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசாங்கம் இவற்றை செய்து வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகிறது என்று நாங்கள் முன்னர் கூறியது தற்போது உறுதியாகியுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இனவாத கட்சியல்ல என்பதை கூற விரும்புகிறேன் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரனின் நடவடிக்கையால் சீர்குழையும் தமிழர்களுக்கான தீர்வு Reviewed by Author on January 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.