வடக்கிற்கு 1658 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
கிராம எழுச்சி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் வடமாகாணத்திற்கு இதுவரை ஆயிரத்து 658 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டின்கீழ் விவசாய குளங்கள் புனரமைப்பு, வீதிகள், பாலங்கள், வடிகால் வசதிகள், நீர் வழங்கல், சமூக பொருளாதார உட்கட்மைப்பு வசதிகளை வலுப்படுத்துவதன் மூலம் கல்வித்துறை மேம்பாடு உள்ளிட்ட 12 துறைகளின் கீழ் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் ,இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “கிராம எழுச்சி திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதுமுள்ள தேர்தல் தொகுதிகளுக்கு 48 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு தேர்தல் தொகுதிக்கு 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 15 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை வட மாகாணத்திற்கு ஆயிரத்து 86 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் 928 மில்லியன் ரூபாய் யாழ்ப்பாணத்திற்கும், 200 மில்லியன் ரூபாய் கிளிநொச்சிக்கும், 143 மில்லியன் ரூபாய் மன்னாருக்கும், 121 மில்லியன் ரூபாய் முல்லைத்தீவுக்கும், 86 மில்லியன் ரூபா வவுனியாக்கும் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
இதனூடாக குறித்த பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு 1658 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
Reviewed by Author
on
February 20, 2019
Rating:

No comments:
Post a Comment