வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை குறிப்பிட்ட ரணில்!
மத்தலவை விட பலாலி மிகவும் சிறந்தது என்றும், முதலீட்டுக்கு ஏற்ப சிறந்த வருவாய் கிடைக்கும் என்ற முடிவுக்கு அரசாங்கம் எப்படி வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் வடக்கு மாகாணத்திற்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 20 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்தும் திட்டம் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன,
20 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்தும் திட்டம் மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்ட போது நாட்டுக்கு இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் தேவையற்றது என்று கூறியவர்கள், திடீரென யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்த முனைவது ஏன்?
மத்தல விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், எதற்காக மூன்றாவது அனைத்துலக விமான நிலையம்? பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அனைத்துலக விமான நிலையங்கள் தொடர்பான அரசாங்கத்தின் முந்திய கொள்கைக்கும் தற்போதைய நிலைப்பாட்டுக்கும் இடையில் முரண்பாடு உள்ளது.
மத்தலவை விட பலாலி மிகவும் சிறந்தது என்றும், முதலீடுக்கு ஏற்ப சிறந்த வருவாய் கிடைக்கும் என்ற முடிவுக்கு அரசாங்கம் எப்படி வந்தது? வடக்கில் ஒரு அனைத்துலக விமான நிலையம் இருப்பது எப்போதுமே நல்லது. ஆனால் அது பொது நிதியை வீணாக்குவதை விட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.
மத்தல விமான நிலையம் பெருமளவு நிதியைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது. அந்த திட்டம் வெற்றியளிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.
பலாலியை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்படும் செலவை விட, மத்தல விமான நிலையத்தை சாத்தியப்படுத்துவது செலவு குறைவானதாக இருக்கக் கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை குறிப்பிட்ட ரணில்!
Reviewed by Author
on
February 20, 2019
Rating:

No comments:
Post a Comment