2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு! டோனியுடன் மோதும் கோஹ்லி படை -
பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள 2019 ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணையில், தேர்தலை கருத்தில் கொண்டு முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டிகள் குறித்து மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 23ஆம் திகதி தொடங்கும் இந்த தொடர் ஏப்ரல் 5ஆம் திகதி வரை, மொத்தம் 8 நகரங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 17 போட்டிகள் நடைபெறும்.
இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த தொடர் குறித்து பி.சி.சி.ஐ வெளியிட்ட அறிவிப்பில், ‘மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து, முதல் இரு வாரங்களுக்கான போட்டி அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை, மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்துபேசி, தேர்தல் திகதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு! டோனியுடன் மோதும் கோஹ்லி படை -
Reviewed by Author
on
February 20, 2019
Rating:

No comments:
Post a Comment