இறுதி யுத்தத்தில் இறந்த அனைத்து உயிர்களுக்குமான ஆத்மா சாந்தி பூஜை!
இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி பிராத்தனை இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பை சேர்ந்த உதயராசா பூசகர் தலைமையில் நடைபெற்ற குறித்த ஆத்தமா சாந்தி சிறப்பு வழிப்பாட்டு பூஜையை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் உதவிக்குருக்களான மகேந்திரநாத குருக்கள் மற்றும் சிவாஜிகுருக்கள், சேரன்குருக்கள் ஆகியோர் இணைந்து நடத்தியுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து முல்லைத்தீவிற்கு சென்ற இந்து மதக்குறுருக்கள் உள்ளிட்டோர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு இடத்தில் இன்று காலை சென்று நன்பகல் வரைக்கும் யாகம் வளர்க்கப்பட்ட ஆத்மா சாந்தி பூசைகள் சிறப்புற மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இதன்போது 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதி யுத்தத்தில் இறந்த அனைத்து உயிர்களுக்குமான ஆத்மா சாந்தி பூஜை!
Reviewed by Author
on
February 20, 2019
Rating:

No comments:
Post a Comment