Brexit ஒப்பந்தம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை: சுவிட்சர்லாந்து -
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தங்களுக்குப்பின் வெளியேறினாலும், அல்லது ஒப்பந்தங்கள் இன்றி வெளியேறினாலும், அதன் வெளியேற்றம் சுவிட்சர்லாந்துடனான உறவுகளை பாதிக்காதவகையில் இரு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
பிரித்தானிய சர்வதேச வர்த்தகச் செயலர் Liam Foxம், சுவிஸ் பொருளாதார அமைச்சர் Guy Parmelinம் நேற்று முன் தினம் Bernஇல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த புதிய ஒப்பந்தம், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் இரு நாடுகளும் சிறந்த பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைத் தொடர்வதற்கான அஸ்திபாரமாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு அல்ல, என்றாலும் பிரித்தானியாவுடனான அதன் உறவு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான நீண்ட கால இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலானதாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் முறையான ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டபின்பு பிரெக்சிட் நடந்தேறுமானால், மாற்ற காலகட்டம் (transition period) முடியும் வரையிலும் அதே ஒப்பந்தங்கள் பிரித்தானியாவுக்கும் பொருந்தும்.
அப்படி ஒப்பந்தங்கள் செய்யப்படாமலே பிரெக்சிட் நடந்தேறுமானால், அப்போது அந்த ஒப்பந்தங்கள் சுவிஸ் - பிரித்தானிய உறவுகளுக்கு பொருந்தாது, உடனடியாக சுவிஸ் பிரித்தானியாவுக்கு இடையில் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தம் அமுலுக்கு வரும்.
பிரித்தானியா சுவிட்சர்லாந்தின் பெரும் வர்த்தகக் கூட்டாளிகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டு, பிரித்தானியாவுக்கு 11.4 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அளவிலான ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டது.
அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில், சுவிட்சர்லாந்து பிரித்தானியாவின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதிக் கூட்டாளியாகும்.

Reviewed by Author
on
February 13, 2019
Rating:
Reviewed by Author
on
February 13, 2019
Rating:

No comments:
Post a Comment