விராட் கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்! இலங்கை ஜாம்பவான் சங்ககாரா புகழாரம்
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். டெஸ்டில் 25 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 39 சதங்களும் விளாசி அனைத்து வித கிரிக்கெட்டிலும் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார்.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என கோஹ்லியை புகழ்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
‘உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி நம்ப முடியாத வகையில் ஓட்டங்களை குவிக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்திற்கும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் சங்ககாரா 63 சதங்களை விளாசிய நிலையில், கோஹ்லி 64 சதங்கள் அடித்துள்ளார். எனினும் கோஹ்லியை, சங்ககாரா புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோஹ்லி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்! இலங்கை ஜாம்பவான் சங்ககாரா புகழாரம்
Reviewed by Author
on
February 13, 2019
Rating:

No comments:
Post a Comment