யாழ்ப்பாண மக்கள் எப்படியானவர்கள்? தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி -
கொழும்பை விடவும் யாழ்ப்பாணத்தில் அதிக சுதந்திரமும் பாதுகாப்பையும் உணர முடிந்ததாக சிங்கள மாணவி ஒருவர் தெரிவித்துள்ளமை தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயிரியில் பிரிவில் கல்வி கற்கும் சிங்கள மாணவி ஒருவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் செவ்வி வழங்கியுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலையும் அங்குள்ள மக்களின் மனநிலைகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இரத்தினபுரியை சேர்ந்த சிங்கள மாணவி ஒருவர் ஏன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை தெரிவு செய்ய வேண்டும் என பெரும்பான்மையின மக்களின் கருத்தாக உள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் குறித்த சிங்கள மாணவி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் படங்களை பார்ப்பதில் எனக்கு அதிக ஆர்வம். யாழ்ப்பாணம் சென்றால் அதுபோன்றதொரு வாழ்க்கை வாழ முடியும் என எண்ணினேன். யாழ்ப்பாணத்தில் கல்வி கற்க வேண்டும் என்று ஆசைப்பட்டே அங்கு சென்றேன்.
சிங்கள மக்கள் நினைப்பது போன்று யாழ்ப்பாணத்தில் எந்தவித கறுப்பு பூதங்களும் இல்லை. அங்குள்ளவர்கள் மிகவும் அன்பானவர்கள். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக மக்களை மட்டும் கருத்தில் கொண்டு வாழ முடியும் என்றால் இதைவிட நன்றாக இருக்கும்.
யாழ்ப்பாணத்திலுள்ள விரிவுரையாளர்கள் மிகவும் நல்லவர்கள். தமிழர், சிங்களவர் என்ற பிரிவு காட்டவில்லை.
எனது விரிவுரையாளர் துவிச்சக்கர வண்டியில் தான் வருவார். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.
உடைகளை பற்றிய கவலை எல்லாம் நமக்கு இருக்கவில்லை. விரும்பிய ஆடைகளை அணிந்து செல்ல முடிந்தது.
நிறைய சுதந்திரம் நமக்கு கிடைத்தது. அங்குள்ள மக்களும் சாதாரணமானவர்கள். உண்மையில் எனக்கு கொழும்பு செல்ல பயம். யாழ்ப்பாணத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் எந்த பயமும் இல்லை.
நான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் வீட்டுக்கார அக்கா மிகவும் பாசமானவர். அவர்களின் இரு பிள்ளைகளை எனது பொறுப்பில் தந்துவிட்டுதான் வெளியில் செல்வார். அப்டியொரு நம்பிக்கை என்மீது இருந்தது என குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.
வட பகுதியை அபாயகரமான பிரதேசமாக தென்னிலங்கை மக்கள் எண்ணி வரும் நிலையில், அந்த போலியான விம்பத்தை சிங்கள மாணவி ஒருவர் உடைத்துள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வடக்கு - தென்னிலங்கை மக்களிடையே வலுவான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் மாணவியின் கருத்துக்கள் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாண மக்கள் எப்படியானவர்கள்? தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி -
Reviewed by Author
on
February 20, 2019
Rating:

No comments:
Post a Comment