பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை: பொஸ்னியாவில் ஆரம்பம் -
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை உட்பட்ட 37 நாடுகளின் 760 குற்றச்சாட்டுக்களை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் செயற்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்த விசாரணைகள், நாளை 11ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை பொஸ்னியாவில் நடைபெறவுள்ளன
இதன்போது ஐந்து மனித உரிமைள் தொடர்பான நிபுணர்கள், அரச அதிகாரத்தினால் மற்றும் தனிப்பட்டவர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பார்கள்.
அத்துடன் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இதில் ஆராயப்படவுள்ளது.
செயற்குழுவின் கூட்டங்கள் தனியாக நடைபெறும் எனினும் பெப்ரவரி 15ஆம் திகதியன்று பொஸ்னியாவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை: பொஸ்னியாவில் ஆரம்பம் -
Reviewed by Author
on
February 11, 2019
Rating:

No comments:
Post a Comment