மன்/வெள்ளாங்குளம் கல்லூரியின் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது-படங்கள்
மன்/வெள்ளாங்குளம் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டிற்கான கல்லூரியின் விளையாட்டு விழாவானது 30/01/2019 புதன்கிழமை கல்லூரியின் புதிய மைதானத்தில் கல்லூரி முதல்வர் திருமதி.ச.இரவீந்திரன் தலைமையில் விளையாட்டுச் செயலாளர் ஆசிரியர்.திரு.பா.பகீர்பரன் நெறிப்படுத்தலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது
பிரதம விருந்தினர்களாக
திரு.K.ஜோதிரட்னராஜா-மடுக்கல்வி வலய ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் அவர்களும்
தேச கீர்த்தி, தேச அபிமானி திரு. S.R.யதீஸ் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களும் அவர்தம் பாரியாரும்
சிறப்பு விருந்தினர்களாக
வணபிதா E.டெனி கலிஸ்ரஸ் தேவன் பிட்டி பங்குத்தந்தை அடிகளாரும் சிவசிஸ்ரீ.K.மகேந்திர குருக்கள் வெள்ளாங்குளம் சந்திரசேகர பிள்ளையார் கோவில் குருக்கள் அவர்களும்
திரு S.செல்வறமணன்-யாழ் சாவகச்சேரியை சேர்ந்த ஆசிரியர், ஓவியர், சிற்பி அவர்களும்
இவர்களுடன் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய அதிகாரியும், வெள்ளாங்குள இராணுவத் தளபதி அவர்களும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலைச்சமூகம் நலன் விரும்பிகள், பெற்றோர்கள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் சான்றிதழ் வெற்றிக்கிண்ணம் விருந்தினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 


மன்/வெள்ளாங்குளம் கல்லூரியின் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது-படங்கள்
Reviewed by Author
on
February 05, 2019
Rating:

No comments:
Post a Comment