இளம்பெண்களின் சடலங்களை சேகரித்து பொம்மைகள் செய்த கொடூரன்:
ரஷ்யாவின் Nizhny Novgorod நகரில் உள்ள குடியிருப்பில் இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு 26 இளம்பெண்களின் சடலங்களை பொம்மைகள் வடிவில் கண்டெடுத்த நிலையில்,
52 வயதான அனடோலி மோஸ்க்வின் என்ற வரலாற்று ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிந்த பொலிசார், அவருக்கு உளவியல் சிகிச்சை தொடர்பில் தண்டனை பெற்றுத் தந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மோஸ்க்வின் சிகிச்சை பெறும் மருத்துவமனையானது, அவர் குணமடைந்து வருவதாகவும், அவரை இனி புறநோயாளியாக சிகிச்சை பெறும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.
ஆனால் சமீபத்தில் தங்கள் முடிவை மாற்றிக் கொண்ட அந்த மருத்துவமனை, மோஸ்க்வின் காலா காலத்திற்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

இருப்பினும் சில தொழில்நுட்ப காரணங்களை குறிப்பிட்டு கடந்த டிசம்பரில் இருந்து அவரை வெளியே அனுமதிக்க நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யாவின் அறியப்படும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் அனடோலி மோஸ்க்வின். கல்லறைகள் தொடர்பாக மிக முக்கிய ஆய்வுகளை அவர் முன்னெடுத்துள்ளார்.
ஆனால் நாளடைவில் அவர் இளம்பெண்களின் சடலங்கள் மீது ஆர்வம் கொண்டு, ரகசியமாக அவைகளை கல்லறைகளில் இருந்து கடத்தியுள்ளார்.
பின்னர் அவைகளை பொம்மைகளாக உருமாற்றம் செய்துள்ளார். இந்த வகையில் இவரது குடியிருப்பில் இருந்து சுமார் 26 பொம்மைகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இளம்பெண்களின் சடலங்களை சேகரித்து பொம்மைகள் செய்த கொடூரன்:
Reviewed by Author
on
February 11, 2019
Rating:

No comments:
Post a Comment