வரலாற்றில் முதல் முறையாக அரபு நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போப்! -
உலகத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவராக பதவி வகித்த போப்பாண்டவர்கள் யாரும் இதுவரை அரபு நாடுகளுக்கு பயணம் செய்ததில்லை.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் முதல் முறையாக அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் இஸ்லாம் பிறந்ததாக கருதப்படும் மண்ணிற்கு சென்ற முதல் போப் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நேற்று மதியம் ரோம் நகரில் இருந்து புறப்பட்டு அபுதாபிக்கு சென்ற போப்புக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அன்வர் கர்காஷ் சிறப்பு வரவேற்பு அளித்தார்.

இன்று நடைபெறும் மதநல்லிணக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் போப், நாளை சயேத் விளையாட்டு அரங்கில் சிறப்பு திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.
இந்நிலையில், அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயத் அல்-நயான், நண்பரும் சகோதரருமான எகிப்து சன்னி முஸ்லிம்களின் தலைவரான ஷேக் அகமது அல்-தயேப் ஆகியோரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக போப் தெரிவித்துள்ளார்.
போப்பின் வருகை குறித்து அன்வர் கர்காஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘போப் வருகையால் மனித குலத்தின் மதிப்பு இங்கு வருகை புரிந்துள்ளது. உலக வரலாற்றில் சகோதரத்துவம், சகிப்புத்தன்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய அத்தியாயம் படைத்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக அரபு நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போப்! -
Reviewed by Author
on
February 04, 2019
Rating:
No comments:
Post a Comment