தமிழ் புலியாக மாற ஆசைப்படும் ஞானசார தேரர் -
முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக, புலியாகிப் போராடியிருப்பேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை- வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில், அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, மனோ கணேசன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நான் சிங்கள பெளத்தனாக பிறந்ததால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன்.
நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால், ஒரு தமிழனாக போராடி, ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன்” என்று ஞானசார தேரர் கூறினார் என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் புலியாக மாற ஆசைப்படும் ஞானசார தேரர் -
Reviewed by Author
on
February 23, 2019
Rating:
Reviewed by Author
on
February 23, 2019
Rating:


No comments:
Post a Comment