போருக்கு தயாராகும் அமேஸான் ஆதிவாசிகள்: யாருக்கு எதிராக?
ஊழல் நிறைந்த ஆட்சியால் களைத்துப்போன பிரேசில் மக்கள், தங்கள் நாட்டை ஆற்றல்மிக்க நாடாக்கும் ஒருவர் வேண்டும் என்று கருதி வாக்களித்ததால் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் Jair Bolsonaro.
ஆனாலும் இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்ய விரும்பும் Jair Bolsonaroவுக்குசில குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தவர்கள் மீது இருக்கும் வெறுப்பைப்பார்க்கும்போது, பலருக்கு இவரது ஆட்சியின் கீழ் இருப்போர்கஷ்டப்படப்போகிறார்கள் என்னும் ஒரு அச்சம் இருப்பதை மறுக்க முடியவில்லை.
இந்த சிறுபான்மையினரில் ஒரு கூட்டம்தான், Uru-eu-wau-wau என்னும் ஆதிவாசிகள். இவர்களில் சிலர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள், Campo Novo de Rondoniaஎன்னுமிடத்தின் அருகில் அமைந்திருக்கும் கிராமங்களில் இவர்கள் வசிக்கிறார்கள்.
வரலாற்றுக் காலம் முதல் இவர்களது எல்லை பாதுகாக்கப்பட்டு வந்த ஒன்றுஎன்றாலும், பட்டாக்கத்திகளுடனும், மரம் அறுக்கும் இயந்திர அரங்களுடனும் இவர்களது எல்லைக்குள் நுழையும் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் ஒரு கூட்டம், காட்டை திருத்தி முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் இந்த ஆதிவாசிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தாதுக்கள் இல்லாவிட்டால் பூர்வக்குடி எல்லைகளே இல்லை, தங்கமும், தகரமும்,மக்னீஷியமும் இங்கு கிடைக்கின்றன, முக்கியமாக அமேஸான் பகுதிகளில், என்று ஏற்கனவே பிரேசில் அதிபர் கூறியுள்ளது இவர்களுக்கு சாதகமாகியுள்ளது.
இந்தியர்களுக்காக நிலப்பகுதியை பாதுகாக்கும் தொல்லைகளிலெல்லாம் நான் தலையிடமாட்டேன் என்றும் Jair Bolsonaro கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே கொஞ்சம் பேராக இருந்தாலும், வேறு வழியின்றி Uru-eu-wau-wau பழங்குடியினமக்கள் தங்கள் அம்புகளை கூர்மையாக்கி, தங்கள் வீட்டை பாதுகாப்பதற்காக போருக்கு தயாராகி வருகிறார்கள்.
போருக்கு தயாராகும் அமேஸான் ஆதிவாசிகள்: யாருக்கு எதிராக?
Reviewed by Author
on
March 05, 2019
Rating:

No comments:
Post a Comment