முசலி பிரதேச சிலாவத்துறை போராட்டத்தில் ஈடுபடும் மக்களுடன் மெசிடோ நிறுவனம் சந்திப்பு
மன்னார் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை மக்கள் கடந்த 20 நாட்களாக தங்களுடைய பூர்வீக நிலத்தை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யுத்த காலப்பகுதியில் கடற்படையினர் குறித்த காணியில் தங்கள் முகாம்களை அமைத்த போதிலும் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடக்க போகின்ற நிலையில் இதுவரை தங்களுடைய காணியை விடுவுக்கைவில்லை எனவும் தங்களுடைய காணிகளை கடற்படையினர் விடுவித்து வேறு அரசகாணிகளில் முகாம்களை அமைக்குமாரு கூறி
சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்பாக தொடத் கவனயீர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
குறித்த மக்களின் போராட்டத்துக்கு பல்வேறுபட்ட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் இவ் போரட்டத்திற்கு ஆலோசனை வழங்கும் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான (மெசிடோ) நிறுவனத்தின் குழுதலைவர் திரு.ஜாட்சன் தலைமையில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது
இவ் சந்திப்பில் குறித்த போரட்டம் தொடர்வது சம்மந்தமாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்ட முறைப்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது அதே நேரத்தில் மக்கள் குறித்த போராடத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றியும் கடற்படையினரால் விளைவிக்கப்படும் இடையூறுகள் சம்மந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
முசலி பிரதேச சிலாவத்துறை போராட்டத்தில் ஈடுபடும் மக்களுடன் மெசிடோ நிறுவனம் சந்திப்பு
Reviewed by Author
on
March 11, 2019
Rating:

No comments:
Post a Comment