சம்பந்தனுக்கு தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய வரப்பிரசாதங்கள் -
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய வரப்பிரசாதங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றிய காலத்தில் சம்பந்தன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனம் தொடர்ந்தும் அவரது பாவனைக்காக வழங்கப்பட உள்ளது.
இதற்கென அமைச்சரவையில் விசேட அமைச்சரவை பத்திரமொன்று சமாப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
சம்பந்தன் பயன்படுத்தி வந்த அதி நவீன வாகனங்கள் மற்றும் அதிகாரபூர்வ இல்லம் என்பனவற்றை தொடர்ந்தும் அவர் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக தற்பொழுது மஹிந்த ராஜபக்ச கடமையாற்றி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரபூர்வ வாகனங்களை சம்பந்தன் இதுவரையில் ஒப்படைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரபூர்வ இல்லம் ஏற்கனவே தமக்கு இருப்பதனால் எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரபூர்வ இல்லம் தமக்கு தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தனுக்கு தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய வரப்பிரசாதங்கள் -
Reviewed by Author
on
March 03, 2019
Rating:

No comments:
Post a Comment