அகில இலங்கை மட்டத்தில் மூன்றாவது முறையாகவும் சாதனை!
நுவரெலியா /அப்பகிரன்லி தமிழ் வித்தியாலய மாணவர்கள் சிறுவர் மெய்வல்லுநர் போட்டியில் கலப்பு பிரிவில் கலந்துக்கொண்டு அகில இலங்கை மட்டத்தில் மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிறுவர் மெய்வல்லுநர் போட்டி (2019.03.11) கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலையின் 03,04,05 மாணவர்கள் அகில இலங்கை மட்டத்தில் முறையே தங்கம், வெள்ளி,வெண்கலம் ஆகிய பதக்கங்களை மூன்றாவது முறையாகவும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தனது விடா முயற்சியினை சாதனை பயணமாக மாற்றி பாடசாலைக்கும், நுவரெலியா கல்வி வலயத்திற்கும் இம்மாணவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
இதன்போது சாதனை படைத்துள்ள மாணவர்களை பாடசாலை அதிபர் அருள்ராஜ், ஆசிரியர்கள் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை மட்டத்தில் மூன்றாவது முறையாகவும் சாதனை!
Reviewed by Author
on
March 12, 2019
Rating:

No comments:
Post a Comment