அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது! நடிகர் விவேக் பெருமிதம் -


உலகில் கடைசி இலங்கை தமிழன் இருக்கும் வரையிலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் ஏற்பாட்டில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது விவேகானந்தரின் நூல் தொகுதியொன்றும் நடிகருக்கு சுவாமிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
















இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது! நடிகர் விவேக் பெருமிதம் - Reviewed by Author on March 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.