அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நடைபெற்ற கொலை குற்றத்துக்காக குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனையும் 800000 ரூபா நஷ்ட ஈடும் வழங்க மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பு

2014 ம் ஆண்டு ஒரு குடும்பஸ்தரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு
மன்னார் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றவாளிக்கு மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்புல்லா பத்து ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன் பாதிப்படைந்த நபரின் மனைவிக்கு எட்டு லட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்கவும் தீர்பளித்துள்ளார்.

2014 ம் ஆண்டு மார்ச் மாதம் 12 ந் திகதி அல்லது அதற்கு முந்திய தினம்
அன்று நீதிமன்ற நியாதிக்க எல்லைக்குட்பட்ட மன்னார் மடு இரணஇலுப்பைக்குளப் பகுதியில் விக்ணேஸ்வரன் யோகேஸ்வரன் என்ற குடும்பஸ்தரை கொலை செய்த சம்பந்தமான வழக்கிலேயே இவ் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மேல் நீதிமன்றுக்கு 10.07.2017 ஆண்டு சட்டமா அதிபர்
காரியாலயத்திலிருந்து இவ் வழக்குக்கான குற்றப்பத்திரம் கிடைக்கப்
பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ் 296 வது பிரிவின் கீழ் இவ் வழக்கு மன்னார் மேல் நீதிமன்றில் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வந்தபோது வியாழக் கிழமை (04.04.2019) இவ் வழக்குக்கான தீர்ப்பு மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்புல்லாவினால் வாசிக்கப்பட்டபோது
கொலையாளி என மன்றில் ஆஐராகி இருந்தவர் குற்றவாளி என
தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ் குற்றவாளிக்கு கொலை செய்த குற்றத்துக்காக பத்து ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதித்ததுடன் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் மனைவிக்கு நஷ்ட ஈடாக எட்டு லட்சம் ரூபாவும் வழங்கவும் நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.

இவ் நஷ்ட ஈடு எட்டு லட்சத்தையும் வழங்க தவறினால் மேலும் இரண்டு வருடங்கள் கடூழிய சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அத்துடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தண்டப்பணம் பத்தாயிரம் ரூபாவையும் செலுத்தவும் தவறினால் மூன்று மாத காலம் சாதாரண சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் இவ்வாறு கட்டளை பிறப்பித்தார்.
மன்னாரில் நடைபெற்ற கொலை குற்றத்துக்காக குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனையும் 800000 ரூபா நஷ்ட ஈடும் வழங்க மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பு Reviewed by Author on April 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.