கூடா நட்புக்கு கல்லால் அடித்து மரண தண்டனை: சர்வதேச நாடுகள் கண்டனம் -
தன்பாலின உறவு, கூடா நட்பு அல்லது மாற்றுக்காதல் ஆகியவற்றுக்கு கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனையை அறிமுகம் செய்துள்ளது புரூனே அரசு. அதே போல் பாலியல் பலாத்காரம், திருட்டு ஆகியவற்றுக்கும் உச்சபட்ச மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் முகமது நபியை கேலி செய்வது அவதூறு செய்தால் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் மரண தண்டனை என அறிவித்துள்ளது.
ஆனால் இச்சட்டங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டு வந்ததால் பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு இந்தச் சட்டங்கள் முழுதும் மீண்டும் முழுவீச்சுடன் செயல்படும் என்று புரூனே ஆட்சியாளர் சுல்தான் ஹசனல் போல்கியா அறிவித்துள்ளார்.
அதே போன்று திருடர்களுக்கு தண்டனையாக கையை, காலை வாங்குவது என்பதும் தெற்காசிய நாட்டில் முதன் முதலில் புரூனேயில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடுமையான தண்டனைச் சட்ட நிறைவேற்றங்களில் சவுதி அரேபியாவுடன் இணைந்துள்ளது புரூனே.
ஆனால், இந்த கடுமையான தண்டனைச் சட்டங்களுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஐ.நா மன்றம், இவற்றை ‘கொடூரமானதும், மனிதத்தன்மையற்றதும்’ என்று சாடியுள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலர் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாப் ஸ்டார் எல்டன் ஜான் தலைமையில் புரூனே நாட்டு விடுதிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பு மைய உதவி இயக்குநர் பில் ராபர்ட்சன், இந்தக் கொடூர சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானது.
குற்றங்கள் அல்லாத செயல்களுக்கும் காட்டுமிராண்டித் தனமான ஆதிகால தண்டனைகள் என்று சாடியுள்ளார்.
கூடா நட்புக்கு கல்லால் அடித்து மரண தண்டனை: சர்வதேச நாடுகள் கண்டனம் -
Reviewed by Author
on
April 03, 2019
Rating:

No comments:
Post a Comment