கம்பளை நாவலப்பிட்டி வீதியில் ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து ஸ்தம்பிதம்
கண்டி மாவட்டம் கங்கேகல பிரதேசசபைக்குட்பட்ட நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியில் , தெம்பிலிகலை கிராமத்திற்கு செல்லும் 10 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட வல்லகொட வீதியை புனரமைத்து தரக்கோரி கிராமவாசிகளால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் குறித்த வீதி நீண்ட காலமாக செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுவதாக தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள் கண்டி மாட்ட அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்
ஆர்பாட்டத்தினால் கம்பளை நாலப்பிட்டி வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக தொலஷ்பாகை, உலபன மாவெலி, பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கம்பளை நாவலப்பிட்டி வீதியில் ஆர்ப்பாட்டம் – போக்குவரத்து ஸ்தம்பிதம்
Reviewed by Author
on
April 03, 2019
Rating:

No comments:
Post a Comment