மனிதம் தொலைத்த....மனிதர்கள் வாழும் பூமி....
மனிதம் தொலைத்த....மனிதர்கள் வாழும் பூமி....
மனிதம் தொலைத்த
மனிதர்கள் வாழும் பூமி
மனம் மரண பயத்தில்...
மானமிழந்து நிற்கிறது சாமி
மரணம்...மரணம்...மரணம்...
மனம் மௌனமாய் மனம்
மாண்டவர்கள்....ஆண்டவர்களின்
மனைகளிலும்...அவலம்...ஐயோ...ஐயோ...
ஆறுதலுக்கும் தேறுதலுக்கும்
ஆலயம் சென்றால்
அங்கு அருள் இன்றி
அடைக்கலம் புகுந்த
அன்பு உறவுகள் இருளில்....
மனமுவந்து...கொடும்பாவிகள்
மடையர்களின் மனிதமற்ற செயலால்
மடிகின்றனர் அப்பாவி மக்கள்
மனதிலும் பிறப்பிலும் ஈனப்ப்றவிகள்...
இறைவன் இயேசு சிவபெருமான் புத்தர் அல்லா
இரக்கமின்றி எல்லா தெய்வங்களும்
இன்னும் ஏன் கல்லாய் சிலையாய்...
இக்கொடுமை கண்டும் கயவரை தண்டிக்காமல்.
மன்றாடிய தெய்வங்கள் அத்தனையும்
மனம் வைத்து காப்பாற்றவில்லை
மனதில் நம்பிக்கையிழந்த உறவுகள்
மரணத்தின் பிடியில் மக்கள்
யுத்தம் முடிந்த பின்பும்-சத்தமின்றி
யூகிக்க முடியாமல் குண்டுவெடிப்புகள்
சூனியமாய் கண்டுபிடிக்காமல்....விடாமல்
சுயராஜ்ஜியத்தில்...சுபிட்சமாய் வாழ....
கவிஞர் வை.கஜேந்திரன்
(இறந்த அனைத்து அன்பு உறவுகளுக்கும்.ஆன்மசாந்திக்காய் பிராத்திப்போம்.....)

மனிதம் தொலைத்த
மனிதர்கள் வாழும் பூமி
மனம் மரண பயத்தில்...
மானமிழந்து நிற்கிறது சாமி
மரணம்...மரணம்...மரணம்...
மனம் மௌனமாய் மனம்
மாண்டவர்கள்....ஆண்டவர்களின்
மனைகளிலும்...அவலம்...ஐயோ...ஐயோ...
ஆறுதலுக்கும் தேறுதலுக்கும்
ஆலயம் சென்றால்
அங்கு அருள் இன்றி
அடைக்கலம் புகுந்த
அன்பு உறவுகள் இருளில்....
மனமுவந்து...கொடும்பாவிகள்
மடையர்களின் மனிதமற்ற செயலால்
மடிகின்றனர் அப்பாவி மக்கள்
மனதிலும் பிறப்பிலும் ஈனப்ப்றவிகள்...
இறைவன் இயேசு சிவபெருமான் புத்தர் அல்லா
இரக்கமின்றி எல்லா தெய்வங்களும்
இன்னும் ஏன் கல்லாய் சிலையாய்...
இக்கொடுமை கண்டும் கயவரை தண்டிக்காமல்.
மன்றாடிய தெய்வங்கள் அத்தனையும்
மனம் வைத்து காப்பாற்றவில்லை
மனதில் நம்பிக்கையிழந்த உறவுகள்
மரணத்தின் பிடியில் மக்கள்
யுத்தம் முடிந்த பின்பும்-சத்தமின்றி
யூகிக்க முடியாமல் குண்டுவெடிப்புகள்
சூனியமாய் கண்டுபிடிக்காமல்....விடாமல்
சுயராஜ்ஜியத்தில்...சுபிட்சமாய் வாழ....
கவிஞர் வை.கஜேந்திரன்
(இறந்த அனைத்து அன்பு உறவுகளுக்கும்.ஆன்மசாந்திக்காய் பிராத்திப்போம்.....)

மனிதம் தொலைத்த....மனிதர்கள் வாழும் பூமி....
Reviewed by Author
on
April 23, 2019
Rating:

No comments:
Post a Comment