முஸ்லிம் மக்களை பாதுகாத்த விடுதலைப் புலிகள்! தமிழ் கிறிஸ்தவர்களை தீவிரவாதிகள் ஏன் அழித்தனர்? -
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படியான பாரிய அனர்த்தம் இலங்கையில் ஏற்படவில்லை. இன்று இதனை செய்பவர்கள் யார் இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
யாழ். குடா நாட்டில் இருந்து விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றுவதாக விமர்சனம் இருந்தாலும் கூட முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்து வராமலேயே அன்று யாழ். குடாநாட்டிலிருந்து அவர்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள். எதுவும் அறியாத சிறு குழந்தைகள் வரையில், அதுவும் தமிழ் ஆராதனை நடத்தும் போது தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டு உயிர்களை பறித்தமையின் பின்னணியை அறிய வேண்டும்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான சூத்திரதாரி யார் என்பதை விரைவில் கண்டு பிடிக்க வேண்டும் என்றார்.
முஸ்லிம் மக்களை பாதுகாத்த விடுதலைப் புலிகள்! தமிழ் கிறிஸ்தவர்களை தீவிரவாதிகள் ஏன் அழித்தனர்? -
Reviewed by Author
on
April 25, 2019
Rating:

No comments:
Post a Comment