41 பேர் உடல் கருகி பலி... பலரது நிலை கவலைக்கிடம்: அவசரமாக தரையிறங்கையில் நெருப்பு கோளமான விமானம் -
விமானம் தீபிடித்த சில நொடிகளுக்கு முன்னர் அதில் இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதாகவும், ஆனால் நெருப்பில் சிக்கி 41 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி காப்பாற்றப்பட்ட பெரும்பாலானோரின் நிலை என்ன என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
விபத்துக்குள்ளான அந்த விமானமானது இருமுறை அவசரமாக தரையிறக்க முயற்சிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மர்மேந்ஸ்க் நகருக்கு புறப்பட்டு சென்ற SU1492 என்ற பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்தே குறித்த விமானமானது தரையிறங்க அனுமதி கோரியுள்ளது.
விமானம் தொடர்பில் வெளியான காணொளியில், நெருப்பு கோளமான விமானத்தின் ஒருபகுதி கரும்புகையை கக்கியபடியே உள்ளது.
மொத்தம் 78 பயணிகள் அந்த விமானத்தில் இருந்ததாகவும், விமான ஊழியர்கள் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
41 பேர் உடல் கருகி பலி... பலரது நிலை கவலைக்கிடம்: அவசரமாக தரையிறங்கையில் நெருப்பு கோளமான விமானம் -
Reviewed by Author
on
May 06, 2019
Rating:

No comments:
Post a Comment