அண்மைய செய்திகள்

recent
-

தேர்தலில் வாக்களிக்க மறுக்கப்பட்ட 95 வயது பெண்மணி: வெளியான அதிர்ச்சி காரணம் -


சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் 95 வயதுடைய பெண்மணி ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Lot-et-Garonne நகரில் வசிக்கும் 95 வயதுடைய பெண்மணி ஒருவர் ஐரோப்பிய தேர்தலின் போது வாக்களிப்பதற்காக Nérac நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.
தனது ஆவணங்களை சமர்ப்பித்த அவர், அதிகாரிகள் அனுமதிக்காக காத்திருந்திருந்துள்ளார்.
அப்போது அதிகாரிகள் இவரின் ஆவணங்களை சோதனையிட்டு விட்டு, வாக்களிக்க முடியாது என மறுத்துள்ளனர்.

அவர்களது தரவுகளில் குறித்த பெண்மணி கடந்த 2017 டிசம்பர் 14, ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பதிவாகியிருந்ததாக குறிப்பிட்டனர்.
இத்தகவல் அப்பெண்மணிக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும், பின்னர் அவருக்கு அந்த விடயம் சிரிப்பை வரவழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நல்லது. அவர்கள் என்னை விட்டுவிட்டு ஐரோப்பாவை கட்டியெழுப்பப்போகிறார்கள். நான் எனது வாக்குரிமையை மீண்டும் உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என உள்ளூர் அதிகாரிகளால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்க மறுக்கப்பட்ட 95 வயது பெண்மணி: வெளியான அதிர்ச்சி காரணம் - Reviewed by Author on May 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.