இலங்கை தற்கொலை குண்டுதாக்குதல்! இந்தியாவில் தங்கியிருந்த தீவிரவாதிகள் -
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்த நிலையில், இலங்கையில் செயற்பட்டு வந்த தேசிய தௌஹீத ஜமாத் உள்ளிட்ட இரண்டு அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள. இந்நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
“குண்டுவெடிப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகளில் சிலர் இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ளனர். காஷ்மீர், பெங்களூர், கேரளாவுக்கும் அவர்கள் சென்றதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன.
அவர்கள் பயிற்சி எடுப்பதற்காகவோ அல்லது சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காக சென்று இருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் நிலவி வந்த அமைதியை தற்போது அவர்கள் கெடுத்துள்ளனர்.
ஆனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். விரைவில் மீண்டும் நாடு முழுவதும் அமைதியான சூழல் உண்டாகும்” என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தற்கொலை குண்டுதாக்குதல்! இந்தியாவில் தங்கியிருந்த தீவிரவாதிகள் -
Reviewed by Author
on
May 05, 2019
Rating:

No comments:
Post a Comment