தலைமன்னார் பியரில் டைனமட் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது.
தலைமன்னார் பியரில் மீன் வாடி ஒன்றில் காணப்பட்ட மீன்கள் டைனமட் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் என சந்தேகத்தின் பேரில் அவ் மீன் வாடி உரிமையாளரை கடற்படையினர் கைது செய்து மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
இவ் சந்தேக நபரை மன்னார் நீதிமன்றில்
முன்னிலைப் படுத்தப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக் கிழமை (24) தலைமன்னார் கடற்படையினர் தலைமன்னார்
பியரிலுள்ள ஒரு மீன் வாடியை சோதனையிட்டபோது அங்கு ஐஸ் பதனிடுவதற்காக வைக்கப்பட்டடிருந்த 273 கிலோ மணலை மீன்கள் டைனமட் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் என சந்தேகத்தின் மீது அவ் மீன்களையும் அவ் மீன் வாடி பொறுப்பாளரையும் கடற்படையினர் கைப்பற்றி மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.
நீதிமன்ற கட்டளைக்கு அமைய கைப்பற்றப்பட்ட மாதிரி மீன்களை பரிசோதனைக்காக நாராவுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் ஏனைய மீன்களை பேசாலை கடற்தொழில் விற்பனை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் எஸ்.திவ்வியன், ஈ.றொபின் ஆகியோர் திங்கள் கிழமை (27.05.2019) சந்தேக நபரை மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஐர்படுத்தியபோது சந்தேக நபர் சார்பாக சட்டத்தரனி எஸ்.டிணேஸன் ஆஐராகி வாதிடுகையில்
இந்த மணலை மீன்பிடியானது மூன்று தொடக்கம் ஐந்து படகுகள் இணைந்தே இவ் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ளுகின்றனர்.
இவர்களால் பிடிக்கப்படும் மீன்கள் ஒரு வாடிகளுக்கு மாத்திரமல்ல மேலும்
ஒரு சில வாடிகளுக்கு பகிர்தளிக்கின்றார்கள்.
இவ்வாறு இருக்க கடற்படையினர் ஏன் இந்த ஒரு மீன் வாடி உரிமையாளரை மட்டும் சந்தேகத்தின் நிமித்தம் கைது செய்தனர் என்பது இங்கு கேள்விக் குறியாக இருக்கின்றது என தனது வாதத்தை மன்றில் முன் வைத்தார்.
இதைத் தொடர்ந்து சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்
சரீரப்பிணையில் விடுவித்து இவ் வழக்கை பிறிதொரு திகதிக்கு
ஒத்திவைத்தள்ளார்.

Reviewed by Author
on
May 28, 2019
Rating:

No comments:
Post a Comment