கடும் சிக்கலில் வடகொரியா: கதறும் அப்பாவி மக்கள் -
இதனால் மில்லியன் கணக்கிலான மக்கள் போதுமான உணவு இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
வடகொரியா சமீப காலங்களாக சர்வதேச பொருளாதார தடைகளால் திணறி வருகிறது. தற்போது கால நிலையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக சுமார் 1.36 மில்லியன் டன் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐ.நா மன்றத்தின் கணிப்புகள்படி இந்த ஆண்டு வடகொரிய மக்கள் நாள் ஒன்றுக்கு 300 கிராம் உணவை மட்டுமே உட்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே வடகொரியாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஆக்கிரமித்து வருகிறது.
வடகொரியாவின் 70 விழுக்காடு மக்கள் அரசின் உணவு விநியோகத்தையே நம்பி உள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு 500 கிராம் என உணவு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தலா ஒருவருக்கு 300 கிராம் அளவுக்கே உணவு விநியோகிக்கப்படுகிறது.
இது அடுத்த 6 மாதங்களுக்குள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. பொருளாதார தடை நீடிப்பதால் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்படுகிறது.
இது இவ்வாறே நிடித்தால் அது, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கடும் சிக்கலில் வடகொரியா: கதறும் அப்பாவி மக்கள் -
Reviewed by Author
on
May 04, 2019
Rating:

No comments:
Post a Comment