மன்னார் சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் வெடி பொருட்கள் மீட்பு -படம்
இன்று மதியம் குறித்த சந்தேகத்திற்கு இடமான குறித்த இரண்டு பொதிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் குறித்த சந்தேகத்திற்கு இடமான பொதிகள் காணப்பட்டதை அடுத்து விரைந்து வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பொதிகளை மீட்டு சோதனையிட்டுள்ளனர். இதன் போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட சி-4 வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் வெடி பொருட்கள் மீட்பு -படம்
Reviewed by Author
on
May 04, 2019
Rating:

No comments:
Post a Comment