முழு நாட்டையும் உலுக்கியுள்ள விடயம்! எதிர்வரும் 30 நாட்களுக்குள் தீர்வா? -
கல்முனை உண்ணாவிரத போராட்டமானது முழு நாட்டையுமே உலுக்கியுள்ளதுடன், வடக்கு மக்கள் எப்போதும் கிழக்குடன் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் தியான மண்டபத்தில் வைத்து உண்ணாவிரத போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதுடன், இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
வடக்கு மக்களின் பரிபூரண ஆதரவு இந்த போராட்டத்திற்கு இருந்தது. அதன் அடையாளமே நாங்கள் அங்கிருந்து இங்கு வந்தது. தற்போதைய அரசாங்கத்திற்கு த.தே.கூட்டமைப்பு பூரண ஆதரவை நல்கிவருகிறது.
எனவே இந்த மக்களின் தேவையை வென்றெடுக்க மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். கடந்த 30 வருட காலமாக கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தீர்த்து வைக்கப்படாமலிருந்து வந்திருக்கிறது.
மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். வெறும் கம்பெரலியவை வைத்து வாயை அடக்கிவிட முடியாது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது இலங்கை வாழ் தமிழ் மக்களின் தன்மான பிரச்சினை.
நிச்சயமாக எதிர்வரும் 30 நாட்களுக்குள் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இதனை வென்றெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
முழு நாட்டையும் உலுக்கியுள்ள விடயம்! எதிர்வரும் 30 நாட்களுக்குள் தீர்வா? -
Reviewed by Author
on
June 24, 2019
Rating:

No comments:
Post a Comment