நடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல்! பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை,
நடக்குமா? நடக்காதா? என பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் சங்க தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று ஒரு வழியாக நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.
கமல்ஹாஸன், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் உள்பட ஏராளமானோர் வாக்களித்தனர். தர்பார் படப்பிடிப்பில் மும்பையில் இருக்கும் ரஜினிகாந்துக்கு தபால் ஓட்டு தாமதமாக சென்றதால் அவரால் ஓட்டு போட முடியவில்லை. அஜித் வாக்களிக்க வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.
நடிகர் சந்தானம் வாக்களித்துவிட்டு தனது ஆதரவு பாண்டவர் அணிக்கே என்றார். நடிகர் மைக் மோகன் பெயரில் யாரோ வாக்களித்துவிட்டனர். அதனால் அவர் அது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒன்றும் நடக்காது என்று தெரிந்த பிறகு கோபமாக கிளம்பிவிட்டார். ஆர்யா சைக்கிள் ஓட்டியபடியே வந்து வாக்களித்தார்.
சுவாமி சங்கரதாஸ் அணியில் செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்து 9 பேர் வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்றதால் விஷாலின் பாண்டவர் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சார வீடியோவால் விஷாலை விளாசி தள்ளிய நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இன்று வாக்களித்தார். அவர் ஏற்கனவே எனது ஓட்டு விஷாலுக்கு கிடையாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாசர் கூறுகையில், இன்றைய தேர்தலில் 85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 1, 604 நேரில் வாக்களித்துள்ளனர். 900 பேர் தபால் ஓட்டுகள் மூலம் வாக்களித்துள்ளனர். வாக்குப்பெட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் வைக்கப்படும். வரும் ஜூலை மாதம் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றார்.
நடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல்! பதிவான வாக்குகள் மொத்தம் எத்தனை,
Reviewed by Author
on
June 24, 2019
Rating:

No comments:
Post a Comment