ரூ.405 கோடிச் சம்பள உயர்வைப் பெற மறுத்தது ஏன்? கூகுள் தமிழர் சுந்தர்பிச்சை விளக்கம் -
இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்பிச்சை கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக அவருக்கு 2014 ஆம் ஆண்டு 250 மில்லியன் டொலர் மதிப்பு கொண்ட பங்குகள் வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு மேலும் 100 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகள் அவருக்கு வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மேலும் 200 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகள் அவருக்கு அளிக்கப்பட்டது.
இருப்பினும், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 2017 மற்றும் 2018- ம் ஆண்டு சுந்தர்பிச்சைக்கு 58 மில்லியன் டொலர்கள், இந்திய மதிப்பில் 405 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வழங்க இருப்பதாக அறிவித்தது.

ஆனால் இந்தப் பங்குகளைப் பெற சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். மேலும், தன்னிடம் போதுமான செல்வம் சேர்ந்திருப்பதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
இதனிடையே, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு அதிகளவில் சம்பளம் வழங்கப்படுவதாக எஞ்சிய ஊழியர்கள் கேள்வி எழுப்பியதால்,
தனக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வைப் பெற சுந்தர் பிச்சை மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.405 கோடிச் சம்பள உயர்வைப் பெற மறுத்தது ஏன்? கூகுள் தமிழர் சுந்தர்பிச்சை விளக்கம் -
Reviewed by Author
on
June 06, 2019
Rating:
No comments:
Post a Comment