நீட் தேர்வு முடிவுகள் வெளியானது:-தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி...
இந்த தேர்வு கடந்த மாதம் ஒடிசாவை தவிர்த்து பிற மாநிலங்களில் 5-ம் தேதியும், ஒடிசாவில் 20-ம் தேதியும் நடைபெற்றது.
இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் தேர்வெழுதி உள்ளனர்.
நீட் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்படும் என்றும், தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கமைய இன்று நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று மதியம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தேசிய அளவில் 56.50 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்த நலின் கந்தேல்வால் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 720க்கு 701 மதிப்பெண் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேச மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 57-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.
மேலும் நீட் தேர்வில் மாற்றுத்திறனாளி பிரிவில் தமிழகத்தின் கார்வண்ணபிரபு 575 மதிப்பெண் எடுத்து 5ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில், கடந்த ஆண்டு 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்தாண்டு 48.57 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் கடந்தாண்டைவிட 9.01 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது:-தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி...
Reviewed by Author
on
June 06, 2019
Rating:

No comments:
Post a Comment