அண்மைய செய்திகள்

recent
-

இளையராஜா பாடல்களுக்கு கட்டணம் எவ்வளவு? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தனது பாடல்களை தனது அனுமதியின்றி பாடுவதற்கும் நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மனு அளித்திருந்தார். இதனை விசரித்த நீதிமன்றம், இளையராஜா அனுமதியின்றி அவர் இசைத்த பாடல்களை வேறு யாரும் பயன்படுத்த சமீபத்தில் தடை விதித்தது.

இந்நிலையில் தன் பாடலுக்கான, ராயல்டி என்ற காப்புரிமை தொகையை, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு, இளையராஜா வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் தீனா அளித்த பேட்டியில், இளையராஜா பாடலுக்கு அனுமதி பெறவும், அதற்கான கட்டணங்களை அறியவும், தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தை அணுகலாம். இதற்கு முன், முதல் நிலையில் உள்ளவர்களுக்கு, இளையராஜா பாடலை பாட, உலக அளவில், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் கட்டணமாக இருந்தது. அது, மிகவும் அதிகம் என, பலரும் கூறியதால், கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சங்கத்தை அணுகினால், உரிய விளக்கம் தரப்படும் என கூறினார்.


இளையராஜா பாடல்களுக்கு கட்டணம் எவ்வளவு? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு Reviewed by Author on June 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.