பிரித்தானியாவில் தவிக்கும் 7,50,000 மக்களின் நிலை? உள்துறை அமைச்சர் உருக்கம் -
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்ட பிரித்தானியா வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தையில், பிரித்தானியாவில் வசிக்கும் 3 மில்லியனுக்கும் அதிகமான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் நிலை குறித்த பிரச்சனை முதலாவதாக இருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வெளியேறும் ஒப்பந்ததிற்கு ஒப்பதல் கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் குறைந்தபட்சம் 2020 டிசம்பர் 31ம் திகதி வரை குடியேறிய அந்தஸ்து பெற விண்ணப்பிக்க வேண்டும் என பிரித்தானியா கூறியுள்ளது.
பிரித்தானியா எதிர்வரும் அக்டோபர் மாதம் 31ம் திகதி வெளியேற இருந்த நிலையில், தனது வெளியேறும் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததால் பிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரித்தானியா உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் எங்கள் நண்பர்கள், பிரித்தானியாவிற்காக அவர்கள் பங்களித்துள்ளனர். பிரக்ஸிட் முடிவு எப்படியாக இருந்தாலும் அவர்கள் இங்கு தொடர்ந்து வாழ வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேறிய திட்டத்தின் படி, பிரித்தானியாவில் ஐந்து ஆண்டு தொடர்ந்து வாழ்ந்து வரும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கே குடியேறிய அந்தஸ்து வழங்கப்படும், அவர்களுக்கு அதே உரிமைகளும் வழங்கப்படும்.
மொத்தம் 445,000 விண்ணப்பங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு குடியேறிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு முன் குடியேறிய அந்தஸ்து வழங்கப்பட்டது, அவர்கள் ஐந்து ஆண்டு கடந்த பின் குடியேறிய அந்தஸ்து பெற விண்ணப்பிக்க முடியும் என சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தவிக்கும் 7,50,000 மக்களின் நிலை? உள்துறை அமைச்சர் உருக்கம் -
Reviewed by Author
on
June 01, 2019
Rating:

No comments:
Post a Comment