அண்மைய செய்திகள்

recent
-

80 இலட்சம் பேர் புகைத்தல் காரணமாக வருடத்திற்கு உயிரிழப்பு!


அதிகரித்து வரும் புகைப்பழக்கம் காரணமாக வருடத்திற்கு 80 இலட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம் கொண்டவர்கள் நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா ஆகிய நோய்களினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதமானவர்கள் நுரையீரல் நோயால் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், புகைப்பிடிக்கும் நபர்களுக்கு அருகே நிற்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வருடத்திற்கு 60 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோர் புகைப்பழக்கம் கொண்டுள்ளதாகவும், இ-சிகரெட் பாதுகாப்பானது என இதுவரை ஆய்வுகள் நிரூபிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

80 இலட்சம் பேர் புகைத்தல் காரணமாக வருடத்திற்கு உயிரிழப்பு! Reviewed by Author on June 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.