85 பேரை துடி துடிக்க கொன்ற நர்ஸ்.. ஜேர்மனியை அதிர வைத்த வழக்கில் தீரப்பு வெளியானது -
டெல்மோர்ஹார்ட் மற்றும் ஓல்டன்பேர்க்கில் உள்ள மருத்துவமனைகளில் 100 நோயாளிகளை கொலை செய்ததாக நீல்ஸ் ஹொகலை என்ற நர்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த யூன் 5ம் திகதி தொடங்கியது.
2015ம் ஆண்டே இரண்டு பேரை விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில், நீல்ஸ் ஹொகலுக்கு தண்டனை வழங்கப்பட்டது நினைவுக் கூரதக்கது.

இந்நிலையில், நீல்ஸ் ஹொகல், 100-க்கும் மேற்ப்பட்ட நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இச்செய்தி ஜேர்மனி நாட்டையே அதிரச்சிக்குள்ளாக்கியது. உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியில் நடந்த மிக மோசமான கொலை சம்பவமாக இது கருதப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீல்ஸ் ஹொகல் 85 பேரை விஷ ஊசி போட்டு கொன்றதை கண்டறிந்தது. இதனையடுத்து, குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
85 பேரை துடி துடிக்க கொன்ற நர்ஸ்.. ஜேர்மனியை அதிர வைத்த வழக்கில் தீரப்பு வெளியானது -
Reviewed by Author
on
June 07, 2019
Rating:
No comments:
Post a Comment