அண்மைய செய்திகள்

recent
-

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் மகனின் இசையில் வெளியாகவிருக்கும் பாடல்!


இந்தியாவில் பிரபலமான இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் இசையில் பல தொழில்நுட்பங்களையும் பல புதுமுகங்களையம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. சென்ற வருடம் இவர்கள் வெளியிட்ட 7UP Madras GIG செம ஹிட் அடித்தது.இதன் முதல் சீசன் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பை இளம் இசையமைப்பாளர்களுக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் அறிமுகப்படுத்தப்பட்டு எந்தெந்த இசையமைப்பாளர்கள் உள்ளனர் என்பதை அறிவித்திருந்தனர்.இந்த சீசனிலும் இளம் இசையமைப்பாளர்களான ஜிப்ரான், டர்புகா சிவா, சீன் ரோல்டன், தரண் குமார் உள்ளிட்டோர் பாடல்கள் வெளியிட உள்ளனர்.

இந்த சீசனிலும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து தற்போது சகோ என்ற பாடலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்துள்ள இந்த பாடலில் தனது மகன் ஏ.ஆர்.அமீனை அறிமுகப்படுத்தியுள்ளார்.

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் மகனின் இசையில் வெளியாகவிருக்கும் பாடல்! Reviewed by Author on June 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.