உலகின் முதல் பறக்கும் கார்! மணிக்கு 150கிமீ வேகத்தில் பயணம் -
கலிபோர்னியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ் நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்த பறக்கும் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஸ்கை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், 5 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒருமுறை எரிபொருளை நிரப்பினால், 644 கிலோ மீற்றர் வரை பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காரில் ஒரு மணிநேரத்திற்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும். ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த காரை, அலைகா நிறுவனம் முதலில் விமானி இயக்கும்படியான மொடலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, முழுமையான Automation கொண்ட மொடல் பிறகு அறிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் மொத்த எடை 454 கிலோ ஆகும். இந்த கார் குறித்து தயாரிப்பு நிறுவனத் தரப்பில் கூறுகையில்,
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அதே வேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதை வாடகை காராகவும், ஆம்புலன்ஸாகவும் மற்றும் அவசரக்கால பயன்பாட்டுக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் மாசு ஏற்படுத்தாது என்பதால், ஸ்கை காருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முதல் பறக்கும் கார்! மணிக்கு 150கிமீ வேகத்தில் பயணம் -
Reviewed by Author
on
June 02, 2019
Rating:
No comments:
Post a Comment