தமிழர்களை சமாதிகளுக்குக் கொண்டு வந்து நிறுத்திய கருணாநிதி: சீமான் கடும் விமர்சனம் -
தமிழகத்தில் உள்ள பாளையங்கோட்டைப் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
பாஜக ஆட்சியில் பசுவைத் தவிர எந்த உயிர்களை வதைத்தாலும் குற்றமில்லை என்ற நிலை உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழர்களை பாரம்பரிய வழிபாட்டிலிருந்து வெளியேற்றி அண்ணா, ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களின் சமாதிகளுக்குக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள் எனவும் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் எப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும்,
நம்மைக் கண்டு அச்சப்படுபவர்களை வெற்றி மூலம் விரும்ப வையுங்கள் என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.
தேர்தலும் நமது நோக்கமும் இன்னமும் முடியவில்லை என பேசிய சீமான், இந்த 5 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ராமர் கோயில் கட்ட வேண்டும் எனவும்,
இல்லையென்றால் நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பில் வழக்குத் தொடரும் எனவும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி பல ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டுவோம் என்று நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



தமிழர்களை சமாதிகளுக்குக் கொண்டு வந்து நிறுத்திய கருணாநிதி: சீமான் கடும் விமர்சனம் -
Reviewed by Author
on
June 02, 2019
Rating:
No comments:
Post a Comment