மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடித்திருவிழாவிற்கான....
இலங்கை அனைத்து மக்களாலும் இன மத பேதமின்றி மிகவும் அன்பு செய்யப்படுகின்ற மன்னார் மறைமாவட்டத்தின் புனித திருத்தலமான மடுத் திருத்தலத்தின் ஆடித்திருவிழாவிற்கான நவ நாட்கள் . 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஆடி திருவிழாவிற்கு இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மக்கள் வருகைதருவது வழக்கம்.
ஆனால் தற்கால சூழ்நிலையில் எமது நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலுக்கு பிற்பாடு மக்கள் பலரும் அச்சத்துடனும், பயத்துடனும் வாழ்ந்து வரும் நிலையில் இந்த வருடம் நடைபெறும் ஆடி மாத திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் காவல் துறையினரால் சோதனை செய்து, பெயர் பதிவுகள் செய்த பிற்பாடே செல்லுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் தெரிவித்துள்ளதுடன்.
பக்தர்கள் தயவு செய்து காவல்துறையினருக்கு ஒத்தாசை வழங்குமாறும் தயவன்போடு கேட்டுக்கொள்ளுகிறோம்.
இத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளாக போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பு, குடிநீர், கடைகள் போன்றவைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த தினைக்களங்களின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆலய சுற்றுப்புற சூழல்களில் சத்தம் போடுதல், விளையாடுதல்,வியாபாரம் செய்தல், கேலி கூத்துகள் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பத அறியத்தருகின்றோம்.
அத்தோடு மது அருந்துதல், சீட்டு விளையாடுதல், வானொலி கேட்டல் போன்றன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமாகும் நவநாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று ஆடி மாதம் 1ம்திகதி நற்கருனை வேஸ்பர் ஆராதனையும், ஆசீரும் இடம்பெறும்.
தொடர்ந்து 02.07.2019 அன்று காலை திருவிழா திருப்பலியானது தமிழ் சிங்கள மொழிகளில் ஆயர்கள், குருக்கள் இனைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுப்பார்கள. அதனை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனியும், மடு அன்னையின் ஆசீர்வாதமும் இடம்பெறும்.
மடு அன்னையின் ஆசீர் பெற உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்,
மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடித்திருவிழாவிற்கான....
Reviewed by Author
on
June 24, 2019
Rating:

No comments:
Post a Comment