மன்னார் நானாட்டான் பிரதேச பிரிவில் கிராம சக்தி வேலைத் திட்டம்-படங்கள்
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கிராம சக்தி வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிகிழமை பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் நானாட்டான் பிரதேச செயலர் எம்.ஸ்ரீஸ்கந்தகுமார் அவர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
வாழ்வாதாரம்,விவசாய உற்பத்தி,கிராம மட்ட சிறு சிறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் போன்றவற்றை சுழற்சி முறையில் பகிர்ந்தளித்தல் சம்பந்தமாகவும் அடுத்த கட்ட வேலைத் திட்டங்கள்,சவால்களுக்கு முகங்கொடுத்தல் சம்பந்தமாகவும் பேசப்பட்டன.
இக்கூட்டத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஜேசுபதம் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.இம்தியாஸ் நானாட்டான் பிரதேச சபை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் என்.றாசிக்பரீத் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஜனாப்.பைசல்.கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜனாப்.ஏ.சி.நிஷார்தீன் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நானாட்டான் பிரதேச பிரிவில் கிராம சக்தி வேலைத் திட்டம்-படங்கள்
Reviewed by Author
on
June 02, 2019
Rating:

No comments:
Post a Comment